செய்திகள்

என் அமைச்சரவையில் லோகேஷ்க்கு இந்தத் துறையைத் தருகிறேன்: விஜய்

லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் பேசிய கருத்துக்கள் வைரலாகி வருகின்றன.

DIN

லியோ திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. படத்தின் பிரம்மாண்ட வெற்றியைக் கொண்டாடும் விதமாக நேற்று (நவ.1) சென்னையில் இதன் வெற்றி விழா நடைபெற்றது. இதில் விஜய், திரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின்போது நடிகர் விஜய்யிடம் தொகுப்பாளர், “லோகேஷ் கனகராஜ் உங்க கட்சியில் இணைந்தால் என்ன பொறுப்பு கொடுப்பீர்கள்?” எனக் கேள்வி கேட்டார். அதற்கு கற்பனையாகத்தானே கேட்கிறீர்கள் என்று சிரித்தவர், “லோகேஷ்க்கு போதைப்பொருள் ஒழிப்பு இலாகா என புதிய துறையைத் துவங்கி அதில் அவரை அமைச்சராக நியமனம் செய்வேன்” என்றார். 

இதைக்கேட்ட ரசிகர்கள், சிரிப்பை அடக்க முடியாமல் கூச்சல் போட்டனர். காரணம், லோகேஷ் கனகராஜ் தன் படங்களில் போதைப் பொருள்களைக் குறித்தே கதையை அமைக்கிறார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT