முகப்பு
செய்திகள்

பாங்காக் சென்ற விஜய்!

நடிகர் விஜய், படப்பிடிப்பு பணிகளுக்காக பாங்காக் சென்றுள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:16 AM
பகிர்:

பாங்காக்கில் நடைபெற உள்ள விஜய் - 68 படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க
நடிகர் விஜய்  பாங்காக் சென்றுள்ளார். அங்கு, சில காட்சிகள் படமாக்கப் பட உள்ளன. 

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இதையும் படிக்க: லேபில் புதிய டிரைலர்!

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த்,  வைபவ், சினேகா, லைலா,  மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

முன்னதாக, இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று சென்னையில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.