வைரலாகும் யுவன்சங்கர் ராஜா - சந்தோஷ் நாரயணனின் பாடல்!
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலிருந்து தீக்குச்சி எனும் புதிய பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலிருந்து தீக்குச்சி எனும் புதிய பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.
இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி முடித்துள்ளார்.
Advertisement
எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது
இதையும் படிக்க: வெளியானது இந்தியன் - 2 அறிமுக விடியோ!
இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாரயணன் பாடிய தீக்குச்சி எனும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.