விசில் சின்னத்துக்கு வாக்களிக்க மக்கள் தயார்: என். ஆனந்த் நம்பிக்கை
சட்டப்பேரவைத் தேர்தலில் தவெகவின் விசில் சின்னத்துக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருப்பதாக என். ஆனந்த் நம்பிக்கை
சட்டப்பேரவைத் தேர்தலில் தவெகவின் விசில் சின்னத்துக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களுடன் என். ஆனந்த் பேசுகையில், "மற்ற கட்சிகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. ஏனெனில், நாங்கள் ஜெயிக்க வேண்டுமென்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. விசில் சின்னத்துக்கு மக்கள் தயாராகி இருப்பது, தலைவர் விஜய் மீது அவர்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது.
நெருக்கடி கொடுத்துக்கொண்டுதான் இருப்பர், அவற்றையெல்லாம் சமாளித்து வெற்றி பெறுபவர்தான் எங்கள் தலைவர்.
Advertisement
Advertisement
தவெகவுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கின்றனர். எல்லோரும் விசில் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டதாக மக்கள் கூறுகின்றனர்.
வெளியிலிருந்து வந்துள்ளேன், இங்கே இருக்கிறேன் என்பது விஷயமல்ல. யார் மக்களுக்கு சேவை செய்கிறார்கள் என்பது மட்டுமே முக்கியம்.
கண்டிப்பாக, இந்தத் தொகுதியில் தலைவர் மற்றும் மக்களின் ஆசியில் வெற்றி பெறுவேன்.
தலைவர் விஜய் ஒரு வாக்குறுதி கொடுக்கிறார் என்றால், அது நடைமுறைக்கு சாத்தியப்படுத்த முடியுமா என்பதை ஆராய்ந்த பிறகுதான், வாக்குறுதிகளாக அறிவிப்பார்.
தலைவர் விஜய் முதல்வரானபின், உங்களுக்கு என்ன தேவைகளோ அதனை நாங்கள் நிவர்த்தி செய்வோம்" என்று தெரிவித்தார்.
TN Polls 2026: People are ready to vote for the Whistle symbol, says TVK Leader N. Anand
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.