8 வருடங்களுக்குப் பிறகு கமலுடன் இணைந்த பிரபல நடிகை!
கமல்-மணிரத்னம் கூட்டணியில் உருவாகிவரும் கமல் 234 படத்தில் லியோ பட நடிகை இணைந்துள்ளார்.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது. படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.
இந்த நிலையில் ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவில் இப்படத்தின் அறிமுக முன்னோட்ட விடியோவின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த விடியோ கமலின் பிறந்த நாளான நவ.7-ல்(நாளை) வெளியாகவுள்ளது. இதற்கு முன்னதாக இன்று மாலை 5 மணிக்கு படத்தின் பெயர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்து ராஜ் கமல் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை த்ரிஷா இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு நடிகை த்ரிஷா கடந்த 2015இல் தூங்காவனம் படத்தில் நடித்திருந்தார். 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார்.
Advertisement
ஏற்கனவே இந்தப் படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை த்ரிஷா சமீபத்தில் விஜய்யின் லியோ படம் மூலம் பிரபலாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.