அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடிக்கிறார். இதில் வில்லனாக ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி(நடராஜ்) நடித்து வருவதாகவும் தகவல்.
இதையும் படிக்க: ஜிகர்தண்டா மலையரசி (நிமிஷா) பதிவிட்ட புகைப்படங்கள்!
முன்னதாக, சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டிருந்தனர். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது டீசர்.
இதையும் படிக்க: ஏமாற்றி வெல்லும் ஹீரோக்கள்! கார்த்திக் சுப்புராஜின் தந்திரம்?
சமீபத்தில் கங்குவாவின் இறுதிக்கட்ட படப்படிப்பு தாய்லாந்தில் நடந்து முடிந்தது. சில காட்சிகளை மட்டும் எடுக்க வேண்டும் என்பதால் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் விஎஃப்எக்ஸ் பணிகளையே நம்பி உள்ளதால் அதற்கான குழு கடுமையாக உழைத்து வருகிறது.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நடிகர் சூர்யா கையில் தீப்பந்தமுடன் இருக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தப் போஸ்டரால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளார்கள். தீயாக இருக்கிறதென கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.