செய்திகள்

விருது என்றாலே கலைஞர்களுக்கு சந்தோஷம்: பார்த்திபன் நெகிழ்ச்சி

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் விருது குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 

DIN

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை கொடுத்து வருபவர் நடிகரரும் இயக்குநருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன். சமீபத்தில் அவர் இயக்கி நடித்து வெளியான  இரவின் நிழல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. 

ஒரே ஷாட்டில் நான் லீனியராக எடுக்கப்பட்ட படம் என்பதால் இந்தப் படத்துக்கு மக்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. 

பல்வேறு திரப்பட விழாக்களில் இந்தப்படத்துக்கு விருது கிடைத்தது. இந்நிலையில் இரவின் நிழல் படத்துக்கு சந்தோஷம் திரைப்பட விருது கிடைத்துள்ளதாக தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.

அதில், “ விருது என்றாலே கலைஞர்களுக்கு சந்தோஷமே! இது சந்தோஷம் திரப்பட விருது மகிழ்ச்சியில் நன்றி. சிறப்பு நிகழ்ச்சி மூலம் வாழ்த்திய பல பிரபல தனியார் தொலக்காட்சிகளுக்கும் என் பார்வைக்கு வராத சேனல்களுக்கும், பாசத்தோடு வாழ்த்திய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் +திரையுலக நண்பர்கள்+ நண்பர்கள் அனைவருக்கும் உளப்பூர்வ நன்றி” எனக் கூறியுள்ளார். 

இதையும் படிக்க: ஏமாற்றி வெல்லும் ஹீரோக்கள்! கார்த்திக் சுப்புராஜின் தந்திரம்?
பார்த்திபன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.  ‘52ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ எனப் பெயரிடப்பட்ட படத்தினை இயக்கி வருகிறார். 

ரசிகர்கள், “பார்த்திபரால் விருதுக்குப் பெருமை” என கமெண்டுகளில் கூறி வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பம்மெட்டு மலைச் சாலையில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்

சாலையில் தேங்கி வீணாகும் குடிநீா்

விவசாயியைத் தாக்கியவா் மீது வழக்கு

சராசரி மழையளவு 63 சதவீதம் வீழ்ச்சி: காரீப் பருவ சாகுபடி பரப்பு பாதிப்பு!

காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT