12த் ஃபெயில் ரீமேக் உரிமையைக் கைப்பற்றிய சூர்யா?
ஹிந்தியில் வெளியான 12த் ஃபெயில் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் சூர்யா கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் பிரபல இயக்குநரான விது வினோத் சோப்ரா இயக்கத்தில் கடந்த அக்.27 ஆம் தேதி வெளியான திரைப்படம் 12த் ஃபெயில்.
12 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மணிஷ் சர்மா என்பவர், தன் கடும் முயற்சிகளால் ஐபிஎஸ் அதிகாரியான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
நாயகனாக விக்ராந்த மாசே நடித்த இப்படம் இந்திய அளவில் கவனம் பெறத் துவங்கியதும் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.
Advertisement
இதையும் படிக்க: தேசிய உரிமைப் பாடலை சிதைத்தாரா? சர்ச்சையில் ஏ.ஆர்.ரஹ்மான்!
இந்நிலையில், இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.