செய்திகள்

கறுப்பாக இருந்தால் அழகில்லையா?: கார்த்திக் சுப்புராஜ் ஆவேசம்! 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் செய்தியாளர் ஒருவரின் மோசமான கேள்விக்கு பதிலளித்தது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

DIN

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த நவ.10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

நிமிஷா சஜயன் 

நிறப் பிரச்னையால் சினிமாவில் நடிக்க ஆசைப்படும் கேங்க்ஸ்டர் சீசரும் (ராகவா லாரன்ஸ்) இயக்குநராக அறிமுகமாகும் கிருபாவும் (எஸ்.ஜே.சூர்யா) எதிர்கொள்ளும் பிரச்னைகளாக ஆரம்பித்தாலும் இது பழங்குடியினப் பிரச்னையை மையமாக கொண்டு சிறப்பாக எடுக்கப்படிருக்கிறது. 

படத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்ததால் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் நிரூபர் ஒருவர், “சித்தா படத்தில் கலக்கியிருந்த நிமிஷா சஜயன் அவ்வளவு அழகாக இல்லையென்றாலும் சிறப்பாக நடித்திருப்பார். அவரை எப்படி வேலை வாங்கினீர்கள்” எனக் கேள்வி கேட்பார்.

அதற்கு கார்த்திக் சுப்புராஜ், “கறுப்பா இருந்தால் அழகில்லையா?.. அது உங்க மனநிலை சம்பந்தப்பட்டது. அது தவறான மனநிலை” எனப் பதிலளித்திருப்பார். 

இந்த விடியோவுக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

SCROLL FOR NEXT