செய்திகள்

கமல் படத்தில் அபிராமி!

விருமாண்டி படத்திற்குப் பின் நடிகை அபிராமி, நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

DIN

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது. படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

தக் லைஃப் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் புரோமோ விடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், ஜனவரியில் துவங்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். 

அபிராமி நடிகர் கமல்ஹாசனுடன் விருமாண்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மதுரை வட்டார மொழியைக் கச்சிதமாகப் பேசி நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார். 

மிடில்கிளாஸ் மாதவன், சமுத்திரம் படங்களிலும் தன் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர், 2004 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றார். அங்கு ராகுல் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகியிருந்தார். தற்போது, மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT