செய்திகள்

ரித்திகாவின் முதல் திருமண நாள்: வைரலாகும் புகைப்படங்கள்!

பாக்கியலட்சுமி தொடரில் நடித்த நடிகை ரித்திகா அவரது திருமண நாளை முன்னிட்டு குருவாரூர் கோயிலுக்கு சென்றுள்ளார்.

DIN

பாக்கியலட்சுமி தொடரில் நடித்த நடிகை ரித்திகா அவரது திருமண நாளை முன்னிட்டு குருவாரூர் கோயிலுக்கு சென்றுள்ளார்.

சின்னத்திரையில் நடிகை ரித்திகா தொகுப்பாளினியாக அறிமுகமானார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி தொடரில் நடித்திருந்தார். தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடையே பிரபலமானார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் நடிகை ரித்திகா. இவர் வினு என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 

அதன்பிறகு,  பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகினார்.  ஆனாலும், இன்ஸ்டாகிடாமில் அவ்வபோது புகைப்படங்கள், விடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், ரித்திகா அவரது முதல் திருமண நாளையொட்டி,  குருவாரூர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ரித்திகாவின் முதல் திருமண நாளுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

கஃபுள் பிரண்ட்லி அசத்தல் வசூல்!

எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியது ஏன்? நடிகை கனிகா விளக்கம்

திருமண கொண்டாட்டத்தில் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா!

SCROLL FOR NEXT