செய்திகள்

இந்தாண்டின் சிறந்த திரைப்படம் இதுதான்: சமந்தாவின் பாராட்டு மழையில் ஜோதிகா!

நடிகை சமந்தா இந்தாண்டின் சிறந்த படம் இதுதான் என நடிகை ஜோதிகா நடித்த படத்தினை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

DIN

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் ஜியோ பேபி, அடுத்ததாக நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை மையக் கதாபாத்திரமாக வைத்து ‘காதல் தி கோர்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான இப்படம் வருகிற நவ.23 ஆம் தேதி வெளியாகிறது. 

அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற ஜார்ஜ் (மம்மூட்டி) தன் மனைவி ஓமணா (ஜோதிகா) மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். ஒருநாள், தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு திரும்புகையில் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கிறார்.

ஆனால், அடுத்த சில நாள்களில் அவருக்கு எதிராக அவர் மனைவி விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தை நாடுகிறார். விவாகரத்துக்குக் காரணமாக அவர் கூறும் காரணம் பூதாகரமாகிறது. அதுதான் படத்தின் மையக் கதை. அதிலிருந்து மம்மூட்டி எப்படி மீள்கிறார் என்பதே கதை. 

வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் மம்மூட்டி, முதன் முறையாக தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருப்பது உச்ச நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்பட பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,  நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “இந்த ஆண்டின் சிறந்த படம் காதல் தி கோர். அழகான வலுவான இந்தப் படத்தினை நீங்களே பார்த்து உங்களுக்கு நன்மை செய்து கொள்ளுங்கள். மம்மூட்டி சார் நீங்கள்தான் எனது நாயகன். இந்த நடிப்பினை பார்த்துவிட்டு என்னால் நீண்ட நேரம் அதிலிருந்து வெளிவர முடியவில்லை. லவ் யூ ஜோதிகா. ஜியோ பேபி லெஜண்டரி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகியின் ஆக்ரா வருகை ரத்து

தீராநதி... பூனம் பாஜ்வா!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய இருவர் யார்?

மயிலழகு... பிரனிதா சுபாஷ்!

SCROLL FOR NEXT