செய்திகள்

ஒரே நாயை வளர்க்கும் சமந்தா - நாக சைதன்யா?

நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் இணைந்து ஒரே நாயை வளர்த்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

DIN

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு  ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்த குஷி என்ற படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

மேலும், சமந்தா முன்னாள் கணவர் நடிகர் நாகசைதன்யாவைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். திருமணமான புதிதில் நாக சைதன்யாவும் சமந்தாவும் ‘ஹாஷ்’ எனப் பெயரிட்ட நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். விவாகரத்துக்குப் பின், அந்நாயை சமந்தா எடுத்துக்கொண்டார். இன்ஸ்டாகிராமில் அந்த நாயுடனான புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் தான் வாங்கிய புது பைக் ஒன்றை நாக சைதன்யாவிடம் காட்டி ஆட்டோகிராஃப் பெற்றார். அப்போது, நாக சைதன்யா அருகிலிருந்தே நாயைப் பார்த்து, “ஹாஷ் இவரை வழியனுப்பிவிட்டு வா” எனக் கூறியிருக்கிறார்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சமந்தாவிடம் இருக்கும் அதே ரக நாயை நாகசைதன்யா வளர்த்து வரலாம் என்றாலும் ஏன் இருவரும் இணைந்திருந்தபோது சூட்டிய அதே பெயரை இந்நாய்க்கும் சூட்ட வேண்டும் என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருவதுடன் இருவரும் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT