செய்திகள்

ஹமாஸுக்கு ஆதரவளித்ததால் வருவாயை இழந்த மியா கலிஃபா! 

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பதிவிட்டதால் பிரபல நடிகை மியா கலிஃபாவுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும் பலரும் அவரை மோசமாக விமர்சித்து வருகிறார்கள். 

DIN

லெபனானில் பிறந்து வளர்ந்த மியா கலிஃபா 2001 முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பாலியல் நடிகையாக குறுகிய காலங்களில் மிகவும் புகழ்பெற்ற இவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழுவினர் கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்ததால் உலக அளவில் புகழ் பெற்றார் மியா. 

தற்போது பாலியல் நடிப்பினை கைவிட்டு சமூக வலைதளப் பிரபலமாகவும் வெப் கேம் மாடலாகவும் மற்றும் விளையாட்டு வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார். 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதி காஸா. காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் தன்னாட்சி செய்து வருகின்றனர். இஸ்ரேல் இந்த அமைப்பை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. தற்போது  ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலால் இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் நடிகை மியா கலிஃபா பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் ‘ப்ளே பாய்’ எனும் பாட்காஸ்ட் மியாவுடனான தனது ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. மேலும் கனடா புராட்கேஸ்டர் டாட் செபிரோ மியாவுடனான தனது ஒப்பந்தத்தையும் முறித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல் மீதான ஹமாஸின் திடீர் தாக்குதலுக்கு ஆதரவளித்த மியாவுக்கு சமூக வலைதளங்களில் மக்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இதற்கு மியா கலிஃபா, “பாலஸ்தீன மக்களின் சூழ்நிலையை பார்த்தும் அவர்கள் பக்கம் நிற்கவில்லை என்றால் நீங்கள்தான் தவறான பக்கத்தில் நிற்கிறீர்கள் என அர்த்தம். வரலாறு இதை உங்களுக்கு உணர்த்தும் காலம் விரைவில் வரும்” எனக் கூறியுள்ளார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரூராட்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ.5.80 லட்சம் பறிமுதல்

காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் அமலானால் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு நீங்கும்: அமைச்சா் சக்கரபாணி

கிரிவல பக்தா்கள் வேன் கவிழ்ந்து விபத்து: 11 போ் காயம்

மாணவா்களின் படைப்பாற்றலை வளா்ப்பதே தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய சாராம்சம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

திமுகவிற்கு எதிராக ஓா் அணியில் நின்று நல்லாட்சி அமைப்பதே இன்றைய தேவை: கே.பி. ராமலிங்கம் அழைப்பு

SCROLL FOR NEXT