தயாரான திரையரங்கம்! லியோவை வெளியிடுவதாக அறிவிப்பு!
விஜய்யின் லியோ திரைப்படத்தை திரையிடப்போவதாக பிரபல திரையரங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் அக்.19-ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியாகவுள்ளது.
இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத அளவிற்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம், ‘லியோ டிரைலரை வெளியிட்ட பிரபல திரையரங்கத்தின் இருக்கைகளை ரசிகர்கள் உடைத்தது குறித்து உங்கள் கருத்து என்ன?’ எனக் கேள்வியெழுப்பப்பட்டது.
இதையும் படிக்க: திரையரங்க இருக்கைகளை உடைத்தது சரியல்ல: லோகேஷ் கனகராஜ்
அதற்கு லோகேஷ், ‘உடைக்கக் கூடாதுதான். லியோ டிரைலரை யூடியூபில் சென்சார் செய்யாமல்தான் வெளியிட்டோம். ஆனால், பாதிப்புக்குள்ளான திரையரங்கம் யூடியூப் விடியோவையே திரையிட்டுள்ளனர். இதில், எங்கள் பங்கு எதுவுமில்லை. மேலும், அதிக ரசிகர்கள் கலந்துகொண்டதால்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. லியோ இசைவெளியீட்டு விழாவை நடத்தாதற்கு இதுவும் ஒரு காரணம்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: அதிக விலை கொடுத்து லியோவைப் பார்க்க வேண்டாம்: லோகேஷ் கனகராஜ்
முன்னதாக, இன்று காலை சென்னையில் உள்ள இத்திரையரங்கம் லியோ திரைப்படத்தை வெளியிடப்போவதில்லை என அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. தற்போது, உடைக்கப்பட்ட இருக்கைகளை மாற்றி புதிதாக தயார் செய்யப்பட்ட திரையரங்கின் புகைப்படங்களை பகிர்ந்த நிர்வாகம், “நூறு பஞ்சாயத்தை தீத்தாச்சுடா, வரலாறு மொத்தம் பிளட் ஆச்சுடா” என்கிற லியோ பாடல் வரியை இணைந்து இப்படத்தை திரையிட உள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.