செய்திகள்

லோகேஷ் கனகராஜுக்கு ஹெலிகாப்டர் உறுதி! 

லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு ஹெலிகாப்டர் உறுதி என இயக்குநர் ரத்னகுமார் பதிவிட்டுள்ளார். 

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது. ரசிகர்களிடம், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

உலகளவில் 6000 திரைகளில் வெளியான லியோ முதல்நாள் வசூலாக ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவே, இந்த ஆண்டில் வெளியான இந்திய திரைப்படங்களில் அதிக முதல்நாள் வசூலைப் பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு படம் வெற்றி பெற்றால் படத்தின் நாயகன், இயக்குநர்களுக்கு கார் அல்லது பரிசுத் தொகை தரும் பழக்கம் விக்ரம், ஜெயிலர் படங்களுக்கு நடந்தது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது. 

நேர்காணல் ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “எனக்கு வசூல் குறித்த பிரச்னைகள் இல்லை. அது எவ்வளவு வசூலீட்டினாலும் எனக்கு கவலை இல்லை. நஷ்டம் வராமல் இருந்தால் போதும். படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் கேட்டால் நான் பட வெற்றிக்காக எனக்கு ஹெலிகாப்டர் வேண்டுமென கேட்பேன்” எனக் கூறியிருந்தார். 

மேயாத மான், ஆடை, குளு குளு ஆகிய படங்களின் இயக்குநரும் மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வசனகர்த்தாவும் ஆகிய ரத்னகுமார் தனது எக்ஸ் பதிவில் பதிவிட்ட  பதிவு வைரலாகியுள்ளது.  

படம் முதல்நாளில் ரூ.148.5 கோடி  வசூலித்ததால் ரத்னகுமார், “லோகேஷ் கனகராஜுக்கு ஹெலிகாப்டர் உறுதி” எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்: விஜய்

நெல்லையில் அமித் ஷா தலைமையில் 22ஆம் தேதி பாஜக மண்டல மாநாடு!

நவீன் பட்நாயக் உடல்நிலை முன்னேற்றம்; இன்று வீடு திரும்புகிறார்

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புயல் சின்னம்!

SCROLL FOR NEXT