செய்திகள்

சம்பளம் போதும்; பட வெற்றிக்காக பரிசுகள் தேவையில்லை: நடிகர் விஜய் 

படத்தின் வெற்றிக்காக தரப்படும் பரிசுகள் தேவையில்லை என நடிகர் விஜய் கூறியதாக தயாரிப்பாளர் லலித் குமார் கூறியுள்ளார். 

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது. ரசிகர்களிடம், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

உலகளவில் 6000 திரைகளில் வெளியான லியோ முதல்நாள் வசூலாக ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவே, இந்த ஆண்டில் வெளியான இந்திய திரைப்படங்களில் அதிக முதல்நாள் வசூலைப் பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு படம் வெற்றி பெற்றால் படத்தின் நாயகன், இயக்குநர்களுக்கு கார் அல்லது பரிசுத் தொகை தரும் பழக்கம் விக்ரம், ஜெயிலர் படங்களுக்கு நடந்தது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது. 

இந்நிலையில், லியோ படத் தயாரிப்பாளர் லலித் நேர்காணல் ஒன்றில், “மாஸ்டர் படத்தின் வெற்றிக்காக பரிசு தரலாமா என விஜய் சாரிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘எனக்குதான் சம்பளம் தருகிறீர்களே அதுவே போதும். தேவையில்லாத பரிசுகள் எதற்கு?’ எனக் கேட்டார். ஆனாலும் லியோ வெற்றிக்காக மீண்டும் ஒருமுறை விஜய் சாரிடம் கேட்பேன். இயக்குநர் லோகேஷ் கனகராஜிடமும் என்ன பரிசு வேண்டுமெனக் கேட்பேன்” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிதீஷ் குமார் பதவியேற்பு விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!

ரிமோட்டை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர்! யாரைச் சொல்கிறார் கமல்?

பாஜக - தவெக கூட்டணி உருவாகுமா? - நயினார் நாகேந்திரன் பதில்!

அனுமனைத் தவறாக பேசுவதா? ராஜமௌலி மீது புகார்!

பிகார் வெற்றிக்குக் காரணம் எஸ்ஐஆர்! நிதீஷைப்போல இபிஎஸ் முதல்வராவார்! - திண்டுக்கல் சீனிவாசன்

SCROLL FOR NEXT