செய்திகள்

வெளியாவதற்கு முன்பே சர்வதேச விருதுகள்.. வைரலாகும் ‘கிடா’ டிரைலர்!

நடிகர் பூ ராமு, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கிடா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் பூ ராமு, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கிடா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கியுள்ள இந்த படத்தில் பூ ராமு, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தீசன் இசையமைத்துள்ளார்.

ஒரு கிராமத்தில் வாசிக்கும் சிறுவனின் ஆசையை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகளை எடுக்கும் தாத்தா, அவர்கள் வளர்த்தும் ஆடுடன் இருக்கும் பிணைப்பு உள்ளிட்டவை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது கிடா திரைப்படம்.

கிடா படமானது வெளியீட்டுக்கு முன்பே பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. படத்தின் டிரைலரை பகிர்ந்து நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் கிடா வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT