வருண் தேஜ் மற்றும் லாவன்யாவின் திருமண அழைப்பிதழானது, தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
தெலுங்கில் 2014-ல் முகுந்தா படத்தின் மூலம் அறிமுகமானவர் வருண் தேஜ். இவர், நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகனும் ஆவார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார் வருண் தேஜ்.
தமிழில் பிரம்மன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிபாதி. தெலுங்கில் வருண் தேஜுடன் இணைந்து 4 படங்களில் நடித்துள்ளார். 2017-ல் மிஸ்டர் படத்தில் நடிக்கும்போது இருவருக்கு காதல் மலர்ந்ததாக தகவல் வெளியான நிலையில், சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
வருண் தேஜ் மற்றும் லாவன்யாவின் திருமணம் நவம்பர் 1 ஆம் தேதி இத்தாலியில் நடைபெறவுள்ளது. பின்னர், நவம்பர் 5 ஆம் தேதி ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க: ரசிகர்களைக் கவரும் லோகிவர்ஸ்!
இந்த நிலையில், இவர்களின் திருமண அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.