செய்திகள்

சதீஷ் படத்துக்கு இசையமைக்கும் யுவன்!

சதீஷ் நடிக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

DIN

சதீஷ் நடிக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

காமெடி நடிகரான சதீஷ் கதாநாயகனாக நடித்த நாய்சேகர், ஓ மை கோஸ்ட் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து வித்தைக்காரன் படத்தில் அவர் நடித்து வருகிறார். பிரவீன் சரவணன் இயக்கும் முஸ்தபா முஸ்தபா படத்திலும் நடிகர் சதிஷ் நடித்து வருகிறார். 

இந்த நிலையில், நடிகர் சதீஷ் 'கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜ் சேவியர் இயக்குகிறார். சென்னையில் பெரும் பொருள்செலவில் பழங்கால அரங்குகள் அமைத்து இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. 

மேலும், முக்கிய வேடங்களில் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி நடிக்கின்றனர். 

இதையும் படிக்க: லியோ ஓடிடி தேதி இதுதானா?

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக நடிகர் சதீஷ் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலக கோப்பை: அரையிறுதிச் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்த இந்தியா! அபார வெற்றி!!

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

‘தி கேரளா ஸ்டோரி 2’ வெளியிட இடைக்கால தடை தொடருகிறது! - கேரள உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT