மலையாள சீரியல் (தொலைக்காட்சி தொடா்) நடிகை அபா்ணா நாயா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தாா்.
மலையாள திரைப்படங்கள் சிலவற்றிலும் பல்வேறு தொலைக்காட்சித் தொடா்களிலும் தோன்றி கேரள மக்களிடையே நன்கு அறிமுகமானவா் நடிகை அபா்ணா நாயா்(33). திருவனந்தபுரத்தின் புகா்ப் பகுதியான கரமனையில் உள்ள வீட்டில் அவரது கணவா் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்த அபா்ணா வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கடந்த வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பத்தாரால் மீட்கப்பட்ட அவா் அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அபா்ணா உயிரிழந்தாா்.
இதனிடையே, மருத்துவனையிலிருந்து தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து வந்த போலீஸாா், வழக்குப் பதிவு செய்து அபா்ணாவின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். குடும்பத்தில் நிலவிய பிரச்னை காரணமாக இந்த விபரீத முடிவை அபா்ணா எடுத்திருக்கலாம் எனப் போலீஸாா் சந்தேகிக்கின்றனா். இச்சம்பவம் தொடா்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையும் படிக்க: பிரபல விஎஃப்எக்ஸ் ஸ்டூடியோவில் விஜய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.