முகப்பு
செய்திகள்

தினமும் விஜய் 68 அப்டேட் உண்டா?: ரசிகர்கள் கேள்விக்கு வெங்கட் பிரபு பதில்! 

நடிகர் விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படத்தின் அப்டேட் தினமும் இருக்குமா என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு இயக்குநர் வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:10 PM
பகிர்:

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘விஜய் 68’ உருவாக உள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் அப்பா-மகன் கதாபாத்திரத்தில்  நடிகர் விஜய் நடிக்கவுள்ளதாகவும் அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும்  மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 

மேலும், இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக  ‘டாடா’ படத்தின் மூலம் பிரபலமடைந்த அபர்ணா தாஸ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. 

இப்படத்தின் போட்டோ ஷூட் காட்சிகளை எடுப்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கடந்த புதன்கிழமை அதிகாலை அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றடைந்தனர். இந்த புகைப்படத்தினை வெங்கட் பிரபு பகிர்ந்திருந்தார். 

நேற்று அமெரிக்காவில் டென்ஜெல் வாஷிங்டன் நடித்துள்ள ஈக்குவலைஷர் 3 திரைப்படத்தினை நடிகர் விஜய் தீவிர ரசிகரைப் போல கைகளை நீட்டி கொண்டாடி பார்த்துள்ளார். இந்தப் புகைப்படத்தினை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள், “தினமும் புகைப்படம் போடுவீர்களா?”, “தினமும் விஜய் 68 அப்டேட் உண்டா?” எனக் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு, “இன்று விடுமுறை” எனப் பதிவிட்டு உடன் சிரிக்கும் எமோஜிக்களை பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →