செய்திகள்

நா ரெடி பாடலுக்கு உற்சாக நடனமாடிய நடிகை அதிதி ஷங்கர்! (விடியோ) 

நடிகை அதிதி ஷங்கர் நா ரெடி பாடலுக்கு காரில் அமர்ந்தபடி நடனமாடிய விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

DIN

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தினை இயக்கி முடித்துள்ளார். இதில் த்ரிஷா, மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். 

லியோ படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' பாடல் விஜய் குரலில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்பாடல் துள்ளல் இசைப் பாடலாக உருவாகியுள்ளது. இதில் விஜய்யுடன் 100க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் நடனமாடி உள்ளனர்.

யூடியூப்பில் 110 மில்லியன் (11 கோடி) பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல பிரபலங்கள் இந்தப் பாடலுக்கு நடனாமாடியுள்ளார்கள். 2 மாதங்கள் ஆகியும் இந்தப் பாடலின் வைஃப் ரசிகர்களிடம் இருந்து அகலவில்லை. 

இந்நிலையில் நா ரெடி பாடலில் அசல் கோளாறு பாடிய பகுதிக்கு நடிகை அதிதி ஷங்கர் தனது காரில் அமர்ந்தபடி வைஃப் ஆகியுள்ள விடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.  இந்த விடியோவிற்கு அசல் கோளாறும் கமெண்ட் செய்திருந்தார்.  இணையத்தில் வைரலாகியுள்ள  இந்த விடியோ 2 இலட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நடிகை அதிதி ஷங்கர் தற்போது விஷ்ணுவரதன், ராம்குமார் ஆகியோரது படங்களில் நடித்து வருகிறார். 

லியோ திரைப்படம் அக்.19ஆம் நாள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரை மேல்... அதிதி ராவ் ஹைதரி!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

காலை இளங்காற்று... பிரணிதா சுபாஷ்!

ஒரு வார இடைவெளிக்குப் பின் சென்னையில் திடீர் கனமழை: வெய்யிலின் தாக்கம் குறைந்தது!

ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT