முகப்பு
செய்திகள்

டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

ரவி தேஜா நடிக்கும் பான் இந்திய படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:11 PM
பகிர்:

1970-களில் ஆந்திராவில் ஸ்டூவர்ட்புரம் என்ற இடத்தில் ராபின் ஹுட்டாக வாழ்ந்த டைகர் நாகேஸ்வர ராவ் என்பவரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டுள்ளது.

ரவி தேஜாவுக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.  

பான் இந்தியப் படைப்பான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் விடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘ஏக்தம் ஏக்தம்’ பாடலின் லிரிக்கல் விடியோவை வெளியிட்டுள்ளனர். தமிழில் இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். அஜய் கிருஷ்ணா பாடியுள்ளார்.

இப்படம் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.