செய்திகள்

ஜவானில் விஜய் இருக்கிறாரா? - சண்டைப் பயிற்சியாளர் சொன்ன தகவல்!

ஜவானில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளாரா என்கிற கேள்விக்கு பிரபல சண்டைப் பயிற்சியாளர் பதிலளித்துள்ளார்.

DIN

இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் நாளை (செப்டம்பர் - 7) வெளியாகவுள்ள நிலையில், இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அனிருத் இசையில் இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

சமீபத்தில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. இந்நிலையில், இந்திய அளவில் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, நேற்று(செவ்வாய்க்கிழமை) வரை முதல்நாள் காட்சிகளுக்காக 7.5 லட்சம் டிக்கெட்களுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், ஜவான் முதல்நாளிலேயே ரூ.100 கோடி வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஷாருக்கானின் பதான் படத்தைப்போல் இப்படமும் ரூ.1,000 கோடி வசூல் குவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றிய அனல் அரசுவிடம் நேர்காணல் ஒன்றில், “ஜவானில் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்கிறார்கள். அது உண்மையா?” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ‘இருக்கு. ஆனா இல்லை’ என்றதுடன் “கண்டிப்பாக ரசிகர்களை உற்சாகப்படுத்தக்கூடிய ஒரு காட்சி இருக்கிறது. ஆனால், அது குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை” எனப் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்னான வாய்ப்பு..! சதமடித்த டெவால்டு பிரெவிஸ் பற்றி ஏபிடி!

ஆதார் கார்டு சரியான அடையாள ஆவணம் அல்ல! : உச்ச நீதிமன்றம் | செய்திகள்: சில வரிகளில் | 12.8.25

உலகின் டாப்-20 கோடீஸ்வரர்கள்: அதானிக்கு மீண்டும் இடம்!

ஆஸி.யின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி; தென்னாப்பிரிக்கா அபாரம்!

மோனிகா பாடலுக்காக மோனிகா பெலூச்சி கூறியதென்ன? பூஜா ஹெக்டே பெருமிதம்!

SCROLL FOR NEXT