செய்திகள்

எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய கயல் சீரியல்! டிஆர்பியில் முதலிடம்!!

டிஆர்பி என்பது, மக்கள் எந்த தொலைக்காட்சியை அதிக நேரம் பார்க்கிறார்கள், எந்த நிகழ்ச்சி / தொடரை அதிக நேரம் பார்க்கிறார்கள் என்பதைக் கணக்கிடுவதாகும்.

DIN


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரை பின்னுக்குத்தள்ளி கயல் தொடர் டிஆர்பி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழ் சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் இன்று (செப். 7) வெளியானது. இதில் தமிழின் முன்னணி தொடர்கள் பலவும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஒருசில தொடர்கள் குறைந்த டிஆர்பி பெற்று பட்டியலில் பின்தங்கியுள்ளன. 

டிஆர்பி (டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட்) என்பது, மக்கள் எந்த தொலைக்காட்சியை அதிக நேரம் பார்க்கிறார்கள், அதில் எந்த நிகழ்ச்சி / தொடரை அதிக நேரம் பார்க்கிறார்கள் என்பதைத் தரவுகள் அடிப்படையில் கணக்கிடுவதாகும். மாதமொருமுறை இவை கணக்கிடப்படுகின்றன. தொடர்களுக்கு வாரமொருமுறை கணக்கிடப்படுகின்றன. 

அந்தவகையில் இந்த வாரத்துக்கான டிஆர்பி பட்டியலில் கயல் தொடர் முதலிடம் பிடித்துள்ளது. இத்தொடர் டிஆர்பியில் 11.06 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக எதிர்நீச்சல் தொடர் உள்ளது. எதிர்நீச்சல் தொடர் 10.42 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த எதிர்நீச்சல் தொடரை, கயல் முந்தியுள்ளது.

கடந்த ஒரு மாதமாகவே கயல் - எதிர்நீச்சல் தொடர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த இரு தொடர்கள்தான் மாறிமாறி முதலிடத்திற்கு போட்டிபோட்டு வருகின்றன. 

எதிர்நீச்சல் 

இந்த இரு தொடர்களுக்கு முன்பு, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. அந்தத் தொடர் கடந்த ஆண்டு இறுதியில் நிறைவு பெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT