முகப்பு
செய்திகள்

3 சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

டிஆர்பி பட்டியல் மற்றும் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பின் அடிப்படையில் இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:13 PM
ஈரமான ரோஜாவே / மகாநதி / ஆஹா கல்யாணம் - தொடர் நாயகிகள்
பகிர்:


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் 3 முக்கியத் தொடர்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

டிஆர்பி பட்டியல் மற்றும் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பின் அடிப்படையில் இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையினரைக் கவரும் வகையிலும் உள்ளன. 

அதற்கேற்ப காதல், உறவுச்சிக்கல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை என ஒளிபரப்பாகும் தொடர்கள் மலையேறிவிட்டன. 

இந்நிலையில், ரசிகர்களிடம் பெற்ற மிகுந்த வரவேற்பின் அடிப்படையில் 3 தொடர்களின் ஒளிபரப்பு நேரத்தை விஜய் தொலைக்காட்சி மாற்றியமைத்துள்ளது.

அதன்படி ஈரமான ரோஜாவே தொடர் பிற்பகல் 2.30 மணிக்கு பதிலாக இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. ஆஹா கல்யாணம் தொடர் 7 மணிக்கு பதிலாக இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. மகாநதி தொடர் இரவு 9.30 மணிக்கு பதிலாக இரவு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. வரும் திங்கள் கிழமை முதல் இந்த நேர மாற்றங்களுடன் 3 தொடர்களும் ஒளிபரப்பாகவுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →