செய்திகள்

விஜய்தான் சூப்பர் ஸ்டார்; லியோவில் சிங்கிள் ஷாட் சண்டைக்காட்சி...: நடிகர் ராமகிருஷ்ணன்

இயக்குநரும் நடிகருமான ராமகிருஷ்ணன் நடிகர் விஜய்தான் இன்றைய சூப்பர் ஸ்டார் எனக் கூறியுள்ளார். 

DIN

2009ஆம் ஆண்டு வெளியான குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகர் ராமகிருஷ்ணன். பின்னர் முரண் எனும் படத்தில் நடித்தார். துணை இயக்குநராக இருந்த இவர் பின்னர் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ என்ற படத்தினை இயக்கினார். 

நீண்ட வருடங்களுக்குப் பிறகு மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய்யின் லியோ படத்தில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மாமன்னன் படத்தில் நடிகர் ராமகிருஷ்ணன் 

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. 

நேர்காணல் ஒன்றில் நடிகர் ராமகிருஷ்ணன், “தற்போதைய சூப்பர் ஸ்டார் விஜய்தான். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நாளை வேறு யாராவது இருப்பார்கள். இங்கு எதுவும் நிரந்தரமில்லை. லியோவில் வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எனது ரசிகர் என்று கூறினார். எனக்கு மிக்க மகிழ்ச்சி. லியோ படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தினை தரும். வேற லெவலில் உருவாகி வருகிறது. படத்தில் சுமார் 20 நிமிஷம் நான் இடம்பெறுவேன் என நினைக்கிறேன். தொழிற்சாலையில் உருவாகியிருக்கும் ஒரு சண்டைக் காட்சி சிங்கிள் ஷாட்டில் எடுத்திருக்கிறார்கள். அற்புதமாக உருவாகியிருக்கிறது லியோ” எனக் கூறியுள்ளார். 

ஏற்கனவே ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையானது. தற்போது மீண்டும் சுப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பலரும் பேசி வருகிறார்கள். லியொ இசை வெளியீட்டில் நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் குறித்து பேசுவாரா என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

SCROLL FOR NEXT