செய்திகள்

மலேசிய பிரதமருடன் ரஜினி சந்திப்பு!

மலேசியா பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்துப் பேசினார்.

DIN

மலேசியா பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்துப் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர்  உலகளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ளார்.

தொடர்ந்து, நடிகர் ரஜினியின் 171-வது  படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இதற்கிடையே, கடந்த மாதம் இமயமலை சென்ற ரஜினி, தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு பயணம் மேற்கொண்டார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட அரசியல் தலைவர்களையும் நேரில் சந்தித்தார்.

இந்த நிலையில், மலேசியா பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி, அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை திங்கள்கிழமை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து ட்விட்டரில் புகைப்படம் வெளியிட்டுள்ள அன்வர் இப்ராஹிம், ஆசிய மற்றும் சர்வதேச கலை உலகில் புகழ்பெற்ற ரஜினியை இன்று சந்தித்தேன். களத்திலும், திரையுலகிலும் ரஜினிகாந்த் சிறந்து விளங்க பிரார்த்திக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருதலைக் காதல்! ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற மாணவர்!

புதிய மாடலை அறிமுகப்படுத்தியது மெர்சிடஸ் பென்ஸ்: விலை ரூ.1.35 கோடி

மசோதாவை நிறுத்திவைக்க முடிந்தால் ஆளுநரின் விருப்பப்படி அரசு செயல்படுகிறதா? - உச்சநீதிமன்றம்

தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

ஆப்கன் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!

SCROLL FOR NEXT