செய்திகள்

அமேசான் ப்ரைமில் விளம்பரமின்றி விடியோக்களை பார்க்க கூடுதல் கட்டணம்!

அமேசான் ப்ரைம் விடியோ, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் அனைத்து விடியோக்களுக்கும் விளம்பரங்களின்றி பார்க்க கூடுதல் கட்டணத்தை  அறிமுகப்படுத்தியுள்ளது. 

DIN

வருவாயை அதிகரிக்க விளம்பரங்களை பயன்படுத்துவது செயலிகளின் பொதுவான நடைமுறையாக இருந்து வருகிறது. அமேசான் ப்ரைம் விடியோ, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் அனைத்து விடியோக்களுக்கும் விளம்பரங்களை அறிமுகப்படுத்தும் திட்டங்களை வெளியிட்டுள்ளது. 

முன்னணி ஓடிடி செயலிகளில் அமேசான் ப்ரைமும் ஒன்று. இந்தியாவில் ஒரு மாதத்துக்கு ரூ.299, 3 மாதங்களுக்கு ரூ.599, ஒரு வருடத்துக்கு ரூ.1499 ஆக கட்டணங்கள் இருக்கின்றன. 

அமேசான் ப்ரைம் விடியோ 2024ஆம் ஆண்டில் இரண்டு அடுக்கு சந்தாக்களை வழங்குகிறது. விளம்பரங்களுடன், பிரைம் சந்தாதாரர்கள் விலை, தற்போது அமெரிக்காவில் டாலர் 14.99 (ரூ.1,162)ஆக உள்ளது. மாற்றமில்லை. ஆனால் விளம்பரமில்லாத விடியோக்களுக்கு அமெரிக்காவில் உள்ள சந்தாதாரர்கள் மாதத்திற்கு டாலர் 2.99 (ரூ.248) அடுத்தாண்டு முதல் கூடுதலாக செலுத்த வேண்டும். மற்ற நாடுகளில் கூடுதல் கட்டணம் குறித்து பின்னர் அறிவிக்கப்படுமென அமேசான் தெரிவித்துள்ளது. 

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் கடந்த ஆண்டு விலை நிர்ணய மாடலை அறிமுகப்படுத்தியது. விளம்பரமில்லாமல் விடியோக்களை பார்க்க மாதத்திற்கு $10.99 (ரூ.912) வசூலிக்கிறது. இது அக்டோபர் 12முதல் மாதத்திற்கு $13.99 (ரூ.1161)ஆக உயரும். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நெட்பிளிக்ஸின் விளம்பரமில்லாத திட்டத்திற்கு $15.49 (ரூ.1285)செலவாகும். 

இந்தியாவில் எவ்வளவு கட்டணம் கூடுதலாக வசூலிக்கும் என்பது குறித்து விரைவில் அமேசான் அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில் காவலாளிகள் கொலை வழக்கு: கைதானவா் தப்ப முயன்ற போது காயம்

லாரி மீது மற்றொரு லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

மத்திய பாஜக அரசின் பிடியில் சிக்கித் தவிக்கிறது தோ்தல் ஆணையம்: முத்தரசன்

வத்திராயிருப்பு அருகே 20 ஆண்டுகளாக மின் இணைப்பின்றி கிராம மக்கள் அவதி

ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் நீா்மட்டம் குறைவதால் விவசாயிகள் கவலை

SCROLL FOR NEXT