செய்திகள்

வெளியானது அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி பட வசூல் விவரம்! 

அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் வசூல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணியாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தமிழில் ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா என பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார். குறிப்பாக பாகுபலி திரைப்படத்தின் வெற்றி அனுஷ்காவை இந்திய அளவில் பிரபலமான நடிகையாக்கியது. 

சமீபகாலமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா தற்போது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்திருந்தார். யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப்படம் அனுஷ்காவின் 48வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

நிரவ் ஷா ஒளிப்பதிவில் பி.மகேஷ்பாபு இயக்கத்தில் அனுஷ்கா, நவின் பாலிஷெட்டிவுடன்  இணைந்து நடித்திருக்கிறார். மேலும்,  ஜெய சுதா, முரளி ஷெர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அர்ஜுன் ரெட்டி பட இசையமைப்பாளர் ரதன் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த செப்.7ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றன. இந்நிலையில் படம் ரூ.50 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. 

சுமார் 13 கோடியில் உருவான இப்படத்தின் வெற்றியை படக்குழு சமீபத்தில் கொண்டாடினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்ஐகே வெளியீடு ஒத்திவைப்பு!

பாடகர் ஸுபீன் கர்க் வழக்கு: சிங்கப்பூர் சென்று விசாரணை நடத்தும் திட்டமில்லை! -அஸ்ஸாம் முதல்வர்

பங்குச் சந்தை மூன்றாவது நாளாக உயர்வு: 25,000 புள்ளிகளை மீண்டும் கடந்தத நிஃப்டி!

பிகார் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிடும் ஆம் ஆத்மி: வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ஒரே நாளில் இருமுறை உயர்வு! ரூ. 89 ஆயிரத்தைத் தொட்ட தங்கம் விலை!

SCROLL FOR NEXT