மார்க் ஆண்டனி திரைப்படத்தைக் குறித்து விஷால் அப்டேட் கொடுத்துள்ளார்.
நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ‘திரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார்.
இப்படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
டைம் டிராவலை மையமாகக் கொண்டு உருவான படமாகத் தெரிகிறது. விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: மகன் பிறந்தநாள் - புகைப்படங்களைப் பகிர்ந்த சிவகார்த்திகேயன்
இறுதிக்கட்ட டப்பிங் பணிகளை மேற்கொள்ளும் விடியோ ஒன்றை நடிகர் விஷால் சமீபத்தில் பகிர்ந்திருந்தார். இப்படம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு(செப்.15) வெளியாக உள்ளது.
இந்நிலையில், விஷால் தன் டிவிட்டர் பக்கத்தில் , ‘சர்பிரைஸ்டா மாமே’ என மார்க் ஆண்டனி படத்தைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இது அப்படத்தில் இடம்பெறும் பாடலின் பெயரா இல்லை வேறு எதாவது ஆச்சரியம் இருக்கிறதா என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.