செய்திகள்

கமல்ஹாசன் குரலில் லியோ முன்னோட்ட விடியோ?

DIN

லியோ படத்தின் கிளிம்ப்ஸ் விடியோவிற்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணிக் குரல் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா,  சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன்  ஆகியோர் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதையும் படிக்க: லியோவில் பாடிய விஜய்!

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளன்று( ஜூன் - 22) லியோ படத்தின் கிளிம்ப்ஸ் விடியோவை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் இந்த விடியோவிற்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணிக் குரல் கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

லியோ படமும் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸில் உருவாகி வருவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: 42 பிரிவினருக்கான ஓபிசி அந்தஸ்து ரத்து- உயா்நீதிமன்றம் தீா்ப்பு

வட்டன்விளை கோயிலில் சுமங்கலி பூஜை

பிரகாசபுரம் தேவாலயத்தில் உயிா் மீட்சிக் கூட்டம்

கிணற்றுக்குள் தவறி விழுந்து விவசாயி பலி

இரு கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்த உயா்நீதிமன்றம் அனுமதி

SCROLL FOR NEXT