முகப்பு
செய்திகள்

மாவீரன் வெளியீட்டுத் தேதி மாற்றம்?

மாவீரன் வெளியீட்டுத் தேதியை படக்குழு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 4 மே, 2023 at 4:27 PM
பகிர்:

மாவீரன் வெளியீட்டுத் தேதியை படக்குழு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாவீரன். இப்படத்தின் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள்.  இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார்.

மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மாவீரன் திரைப்படம், ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தை ஜூலை மாதம் வெளியிடும் திட்டத்தில் தயாரிப்பு நிறுவனம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.