செய்திகள்

அல்லு அர்ஜுன் - அட்லி - அனிருத் கூட்டணி?

இயக்குநர் அட்லியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநர் ஷங்கரின் துணை இயக்குநராக இருந்து தனது முதல் படமான ‘ராஜா ராணி’ மூலம் பிரபலமானவர் இயக்குநர் அட்லி. அடுத்து நடிகர் விஜய்யுடன் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தினை இயக்கினார்.

ஜவான் திரைப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. அடுத்து ரூ.3000 கோடி வசூலிக்கும் படத்தினை இயக்க உள்ளதாகவும் நடிகர்கள் விஜய், ஷாருக்கானை வைத்து படமெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் நேர்காணலில் அட்லி கூறியிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தை அட்லி இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகும் என்றும் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்.

தற்போது, அல்லு அர்ஜுன் புஷ்பா - 2 படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பொருள் செலவில் இப்படம் உருவாகி வருவதால், புஷ்பா - 2 வசூல் சாதனையை நிகழ்த்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் பணி! செங்கல்பட்டு சாலை மூடல்!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வாட்டர் மெலன் ஸ்டார் வெளியேற்றம்!

எஸ்ஐஆர்-க்கு எதிராக மாநிலம் முழுவதும் தவெக இன்று ஆர்ப்பாட்டம்!

மெக்சிகோ அரசுக்கு எதிராக ஜென் ஸீ போராட்டம்!

பெண்கள் வியாபாரக் கும்பலின் குரூரமும் காவல்துறையின் கருணையும்! - தில்லி கிரைம் - 3!

SCROLL FOR NEXT