செய்திகள்

ஒயிட் ரோஸ் - வெல்வாரா கயல் ஆனந்தி?

நடிகை கயல் ஆனந்தியின் ஒயிட் ரோஸ் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

DIN

கயல் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆனந்தி. இப்படத்திற்குப் பின் பரியேறும் பெருமாள், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களில் நடித்து கவனிக்கப்பட்டார்.

பின், 2021-ல் மூடர்கூடம் இயக்குநர் நவீனின் உறவினரான சாக்ரடீஸ் என்பவரைத் திருமணம் செய்த ஆனந்திக்கு ஒரு மகள் இருக்கிறார்.

சமீபத்தில் ஆனந்தி நடித்த ‘மங்கை’ திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து, பூம்பாரை முருகன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’.

இதில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் மாறுபட்ட வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜித், புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சுதர்ஷன் இசையமைத்துள்ளார். இவர் முன்னதாக பர்மா, என்னோடு விளையாடு, ஒரு கோடை மர்டர் மிஸ்டரி ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் டிரைலர் வெளியான நிலையில், இப்படம் வருகிற ஏப்.5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. கயல் மூலம் சிறந்த நாயகியாக அறியப்பட்ட ஆனந்தி திருமணம், குழந்தை என சினிமாவிலிருந்து விலகினார். தற்போது, மீண்டும் ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT