படம்: எக்ஸ்
படம்: எக்ஸ்
செய்திகள்

ராமாயணம் படத்தில் ஆஸ்கர் வென்ற இரண்டு இசையமைப்பாளர்கள்?

DIN

நிதிஷ் திவாரி இயக்கும் ராமாயணம் படத்துக்காக ஆஸ்கர் வென்ற இரண்டு இசையமைப்பாளர்கள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'பவால்’, ‘சிச்சோரே’ ஆகிய படங்களை இயக்கிய நிதிஷ் திவாரி, அடுத்ததாக ராமாயணத்தை படமாக்க உள்ளார். இப்படத்தின் முதற்கட்ட பணிகளில் நிதிஷ் திவாரி ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இப்படத்தில் நடிகர்கள் யஷ், ரன்பீர் கபூர், நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியது.

இதற்காக நடிகர் ரன்பீர் கபீருக்கு புதிய குரல் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் இந்தப் படத்துக்காக ஆஸ்கர் வென்ற பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் உடன் நமது ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் முதன் முறையாக ஹான்ஸ் ஜிம்மர் வரவிருக்கிறார். சர்வதேச தரத்தில் ராமாயணம் படத்தினை கொண்டு செல்ல நிதிஷ் திவாரி உழைத்து வருகிறார். இந்த இணை ஈடு இணையற்றது. இரண்டு சர்வதேச திறமைசாலிகள் தற்போதைய இந்தியாவின் கதையை உலகுக்கு தெரியப்படுத்துவார்கள்.

இந்தப் படத்துக்காக வருட கணக்கில் ஆராய்ச்சி செய்து முன் தயாரிப்பு பணிகளும் பல மாதங்களாக செய்து வருகிறார்கள். ராமாயணம் மிகவும் முக்கியமான படம். அதனால் பொறுப்புடன் எடுக்கவிருக்கிறார்கள். ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் இதனை வெளிநாடுகளில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகின்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யார் இந்த ஹான்ஸ் ஜிம்மர்?

ஜெர்மனியைச் சேர்ந்த 66 வயதானவர் ஹான்ஸ் ஜிம்மர். 1980 முதல் இசையமைத்து வருகிறார். 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைதுள்ள இவர் ஆஸ்கர் விருதினை 2 முறையும், கிராமிய விருதினை 4 முறையும், கோல்டன் குளோப் விருதினை 3 முறையும் பெற்றுள்ளார்.

பாண்டஸி படங்களுக்கு இசையமைப்பதில் மிகவும் பிரபலமனாவர் ஹான்ஸ் ஜிம்மர். ப்ளேட் ரன்னர், இண்டர்ஸ்டெல்லர், தி டார்க் நைட், லயன் கிங், குங்ஃபூ பாண்டா, டியூன் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஹான்ஸ் ஜிம்மர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT