முகப்பு
செய்திகள்

வேட்டையன் வெளியீடு அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் வேட்டையன் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

Updated On : 7 ஏப்ரல், 2024 at 10:32 AM
பகிர்:

ஜெயிலர், லால் சலாம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். 

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு வேட்டையன் எனப் பெயரிட்டுள்ளனர். 

தூத்துக்குடி, சென்னை, ஆந்திரம் பகுதிகளில் படப்பிடிப்புகள் நடந்த முடிந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →