செய்திகள்

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூருக்கு திருமணம்: எங்கு தெரியுமா?

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

DIN

ஹிந்தியில் பிரதான நாயகியாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான நடிகை ஜான்வி கபூர்.

தமிழில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார் ஜான்வி.

தற்போது, இவர் ஜூனியர் என் டிஆர் நடிப்பில் உருவாகும் தேவரா படத்தில் நடித்து வருகிறார்.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேயின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவுடன் ஜான்வி நெருங்கிப் பழகி வருவதாக தகவல் வெளியானது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக, தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் உருவான மைதான் படத்தின் திரையிடல் காட்சிக்கு வந்திருந்த ஜான்வி கபூர், ஷிகர் பஹாரியாவின் பெயர்கொண்ட நெக்லஸ் அணிந்து வந்திருந்தார்.

சமீபத்திய பேட்டியிலும், அவரது தந்தை போனி கபூர் தன் மகளின் காதல் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார்.

இந்ந்நிலையில் ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியாவின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது. அதுவும் ஜான்வி கபூர் முன்னதாக தெரிவித்த திருப்பதி கோயிலில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT