முகப்பு
செய்திகள்

முதல் காதலன் என்னை ஏமாற்றிவிட்டார்: வித்யா பாலன்

நடிகை வித்யா பாலனின் முதல் காதலன் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறியுள்ளார்.

Updated On : 13 ஏப்ரல், 2024 at 5:24 PM
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2024 at 4:04 PM

நடிகை வித்யா பாலனின் முதல் காதலன் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறியுள்ளார்.

மலையாளியான நடிகை வித்யா பாலன் பாலிவுட்டில் பிரபல நாயகியாக அறியப்படுபவர். நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைத் தழுவி வெளியான ‘டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்தில் சில்க் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். பல விருதுகளை வென்றுள்ள இவர் கஹானி படத்தின் மூலம் ஹிந்தியில் முக்கிய நாயகியானார்.

தொடர்ந்து, நல்ல கதைகளை தேர்வு செய்கிற வித்யா பாலன் நாயகியை மையமாகக் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வித்யா பாலன்,நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். 2003-ல் பாலோ தேகோ என்கிற வங்காளத் திரைப்படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டின் மூத்த நடிகையாக இருக்கிறார்.

Advertisement

வித்யா நடிப்பில் வெளியான ‘ஷெர்னி’ படம் இந்திய அளவில் கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது, புல் புலய்யா - 3 படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சித்தார்த் ராய் கபூர் என்பவரை திருமணம் செய்துள்ள வித்யா பாலன் சமீபத்திய ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, “நான் முதன்முதலில் காதலித்த ஒருவன் என்னை ஏமாற்றிவிட்டான். அவன் நிச்சயமாக மோசமானவன் என்பதை உங்களுக்கு சொல்லியாக வேண்டும். எங்களுக்கு காதலர் தினத்தன்றுதான் பிரேக்-அப் ஆகியது; அவன் உடனேயே அவனது முன்னாள் காதலியை பார்க்கப்போகிறேன் என்று கூறியது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது நான் மிகவும் உடைந்துவிட்டேன். ஆனால், அதிலிருந்து மீண்டுவந்து எனக்கான நல்ல விஷயங்களை நான் செய்திருக்கிருக்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.