செய்திகள்

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

இயக்குநர் மிஷ்கின் இசையமைப்பாளராக 2ஆவது முறையாக பணியாற்றுகிறார்.

DIN

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி  நுட்பமான கதைகளை இயக்கி வருபவர் இயக்குநர் மிஷ்கின். 

இசை மீது அதீத ஆர்வம் கொண்ட மிஷ்கின், சமீபத்தில் இசை பயிற்சியும் எடுத்துக்கொண்டார். டெவில் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.

மேலும், நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்தாக லியோவிலும் சிறப்பாக நடித்திருந்தார்.

மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் துவங்கி நடைபெற்று வருவகிறது.

நடிகர் விஜய் சேதுபதி - மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘ட்ரெயின்' (train) எனப் பெயரிட்டுள்ளனர். கலைப்புலி எஸ். தாணு இப்படத்தைத் தயாரிக்கிறார்

ட்ரெயின் படத்தின் நாயகியாக டிம்பிள் ஹயாதியும் முக்கிய கதாபாத்திரங்களில் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ் , பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்காக ஒரு பாடலையும் பாடியுள்ளார் மிஷ்கின். இது மிஷ்கின் இசையமைக்கும் 2ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘பிசாசு - 2’ திரைப்படம் சில பிரச்னைகளால் இன்னும் வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

SCROLL FOR NEXT