செய்திகள்

சென்னை வந்தடைந்தார் நடிகர் விஜய்!

நடிகரும் த.வெ.க. கட்சியின் தலைவருமான விஜய் சென்னை திரும்பினார்.

DIN

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியது. இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.கோட் படத்தின் படப்பிடிப்பு 80 சதவிகிதம் முடிவடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்துக்குப் பிறகு விஜய் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை உருவாக்கியுள்ள விஜய் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

இந்நிலையில் ரஷியாவில் இருந்து சென்னை திரும்பியுள்ளார் விஜய். அவரது வீட்டில் இருந்து சிவப்பு நிற காரில் வாக்களிக்க செல்லவிருப்பதாக ரசிகர்கல் விடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

'விஜய் 69' படத்தோடு சினிமாவில் நடிப்பதை முழுவதுமாக கைவிடுவதாக நடிகர் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT