நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக அவர் நடிப்பில் வெளியானவால்டர் வீரய்யா, வீரசிம்மா ரெட்டி, சலார் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்ததால் தனக்கான மார்க்கெட்டை ஸ்ருதி தக்க வைத்துள்ளார்.
சமீபத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ‘இனிமேல்’ ஆல்பத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், ஸ்ருதி ஹாசன் தன் காதலரான ஷாந்தனு ஹசாரிகாவைப் பிரிந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் உறவிலிருந்த நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளனர். ஆனால், இந்தப் பிரிவு குறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.