சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் புதிய படமான ‘குரங்கு பெடல்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயன் புரோடக்ஷன் என்ற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார்.
இந்நிறுவனத்தின் மூலம் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் குரங்கு பெடல் என்ற புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை கமலகண்ணன் இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
மேலும், இப்படத்தில் சந்தோஷ் வேல்முருகன், விஆர் ராகவன், ஞானசேகர், ரத்திஷ், சாய் கனேஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
இந்நிலையில், குரங்கு பெடல் படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.
இப்படம் வரும் மே 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சைக்கிள் ஓட்டுவதற்கு கற்றுக்கொள்ளும் 5 சிறுவர்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.