முகப்பு
செய்திகள்

ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 7:40 AM
லைகா நிறுவனர் சுபாஸ்கரன், ஜேசன் சஞ்சய்.
பகிர்:

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் 2009-ஆம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் வரும் ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ பாடலில் ஜேசன் சஞ்சய்யின் நடனம் பலரது கவனத்தை ஈர்த்தது.

அதன்பிறகு, பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக சஞ்சய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்டப்படிப்புக்காக வெளிநாடு சென்றார்.

தொடர்ந்து பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், சஞ்சய்யை கதாநாயகனாக அறிமுகம் செய்வதற்கு ஒருமுறை கதை சொல்லியிருந்தார். ஆனால், நடிப்பில் ஈடுபாடில்லை என்றும் இயக்குநராக விரும்புவதாகவும் கூறிய சஞ்சய், சில குறும்படங்களையும் இயக்கினார்.

சில மாதங்களுக்கு முன்பு, லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை சஞ்சய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் நாயகன் யார் என இன்றுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், மீண்டும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் நாயகனாக துருவ் விக்ரமும் நாயகியாக அதிதி ஷங்கரும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்கும் என்றும் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.