செய்திகள்

50-வது படத்தின் வெற்றி... உற்சாகத்தில் தனுஷ்!

தனுஷின் ராயன் திரைப்படம் வசூல் வெற்றியைப் பெற்றுள்ளது.

DIN

ராயன் திரைப்படத்தின் வெற்றியால் தனுஷ் மற்றும் அவரின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதேநேரம், சில சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதால், படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது.

இப்படம், உலகளவில் ரூ.120 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாகவும் தமிழகத்தில் மட்டும் ரூ.60 கோடியைத் தாண்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவே, நடிகர் தனுஷ் நடித்த படங்களிலேயே பெரிய வசூலைப் பெற்றிருக்கிறது. மேலும், தமிழ் சினிமாவில் 50-வது படம் எந்த நடிகருக்கும் சரியாக அமையாது என்கிற எண்ணம் உண்டு. இதை, நடிகர் அஜித்குமார் மங்காத்தா படத்திலும் விஜய் சேதுபதி மகாராஜா படத்திலும் முறியடித்தனர்.

தற்போது, தனுஷும் 50-வது படத்தில் வெற்றி பெற்றிருப்பது அவருக்கும் அவரின் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மஞ்சணத்தி என்றால் என்ன? மாரி செல்வராஜ் விளக்கம்!

அந்தி மாலை நேரம்... சரண்யா துராடி!

வண்ண மானே... ஸ்வேதா!

தங்கச் சிலை... சப்தமி கௌட!

இவ்வளவு பெரிய படத்தில் இதைக் கவனிக்கவில்லையா?

SCROLL FOR NEXT