செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறேன்: கமல்ஹாசன்!

DIN

நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

உலகளவில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்திய மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. தமிழில் பிரபல தொலைக்காட்சியில் 2016 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

வெறும் பொழுதுபோக்கு அம்சத்திற்காக இல்லாமல் பல சினிமா அனுபவங்களையும் புத்தகங்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தினார்.

இந்த நிலையில், தொகுப்பாளராக கடந்த 7 ஆண்டுகளாக பொறுப்பு வகித்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

கமல்ஹாசன் அறிக்கை.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கனத்த மனதுடன் இதை அறிவிக்கிறேன். 7 ஆண்டுகால பயணத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சிறிய ஓய்வை எடுக்கிறேன். என் அடுத்தடுத்த திரைப்பட பணிகளால் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

நீங்கள் கொடுத்த அன்பும் ஆதரவும் இந்தியளவில் முக்கியமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இது மாறியது. அடுத்த பிக்பாஸ் சீசனும் பெரிய வெற்றியைப் பெறும். உங்கள் அனைவருக்கும் போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கமல்ஹாசன் விலகியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

SCROLL FOR NEXT