காளி வெங்கட், யோகி பாபு, லட்சுமி மேனன்.  
செய்திகள்

காளி வெங்கட் வில்லன்! யோகி பாபு, லட்சுமி மேனனின் மலை திரைப்படம் ரிலீஸ் எப்போது?

நடிகர் யோகி பாபு, லட்சுமி மேனன் இணைந்து நடித்துள்ள மலை படத்தின் வெளியீடு குறித்து படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

DIN

நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனகாவும் நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு. இவர் நடிகை லட்சுமி மேனன் உடன் இணைந்து மலை என்ற படத்தில் நடிப்பதாக 2022இல் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தப் படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இயக்குநர் சுசீந்திரன், சீனுராமசாமி இடம் உதவி இயக்குநராக இருந்தவ ஐபி முருகேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கொங்கனி மலையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் லஷ்மி மேனன் மருத்துவராக நடித்துள்ளார். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடேட் இதனை தயாரிக்கிறது.

இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்தப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகுமெனவும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் காளி வெங்கட், சிங்கம் புலி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

காளி வெங்கட் வில்லனாக நடித்துள்ளார். வில்லனாக இது அவருக்கு முதல்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு, மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பும் செய்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT