இந்தியன் -2  
செய்திகள்

ஓடிடியில் இந்தியன் - 2: இந்த வாரம் வெளியான திரைப்படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன என்பதைக் காணலாம்.

DIN

திரையரங்குகளில் வாரந்தோறும் படங்கள் வெளியாகுவதுபோல, ஓடிடி தளங்களிலும் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் - 2 திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளது.

சோனியா அகர்வால் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான திரில்லர் திரைப்படமான 7/ஜி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

நடிகர் மம்மூட்டி நடிப்பில் வைசாக் இயக்கத்தில் கடந்த மே.23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான டர்போ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

நடிகை டாப்ஸி நடிப்பில் வெளியான ஹிந்தி திரைப்படமான பிர் ஆயி ஹஸீன் தில்ருபா என்ற திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

இதைத் தவிர சென்ற வாரம் ஓடிடியில் வெளியான ரயில் திரைப்படம் ஆஹா தமிழிலும், உள்ளொழுக்கு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியிலும், த்ரிஷா நடிப்பில் உருவான பிருந்தா இணையத் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்திலும் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா

பட்டாசுகள் திருட்டு: கிட்டங்கி உரிமையாளா் கைது

தஞ்சை பெரிய கோயிலில் மழைநீா் தேங்காமலிருக்க தரைத் தளப் பணி

SCROLL FOR NEXT