சூர்யா 
செய்திகள்

கங்குவா டிரைலரில் கார்த்தி?

DIN

நடிகர் கார்த்தி கங்குவா டிரைலரில் இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. இதில் சூர்யா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானியும் வில்லனாக பாபி தியாலும் நடித்துள்ளனர்.

இன்று இயக்குநர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா டிரைலரை வெளியிட்டுள்ளனர். வனத்திற்குள் வாழ்ந்த பழங்கால மனிதர்கள், அவர்களின் தோற்றம், போர்க்காட்சிகள் என பல இடங்களில் அனிமேஷன் மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும், டிரைலர் வெளியான 5 மணி நேரத்திற்குள் 42 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது.

கார்த்தி என நினைக்கப்படும் கதாபாத்திரம்.

முன்னதாக, கங்குவா இரண்டாம் பாகத்தின் வில்லனாக நடிகர் கார்த்தி நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்த டிரைலரின் இறுதிக்காட்சியில் ஒரு கதாபாத்திரம் குதிரையில் வருகிறார். அவரைப் பார்த்து சூர்யா சிரிக்கிறார். இது, நடிகர் கார்த்தியாகவே இருக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டிரைலரைப் பார்த்த கார்த்தி, 'என்னவொரு டிரைலர்... இந்த உணர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. மிக மிக பெருமையாக இருக்கிறது’ என தன் அண்ணன் சூர்யாவைக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? - புகார் எண்கள் அறிவிப்பு!

டிகாப்ரியோ திரைப்படத்துக்கு கோல்டன் குளோப் விருது!

சென்செக்ஸ் 301.93 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

குழம்பு சுவைக்க.. மணக்க! அற்புதமான யோசனைகள்!!

மாதவிடாய் காலத்தில்கூட... தனுஷ் படக்குழு மீது குற்றம்சாட்டிய பார்வதி!

SCROLL FOR NEXT